மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் கிரிமினல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார் என்றும், அவர் மீதான இக்குற்றசாட்டை போலீஸ் தரப்பு சட்டப்பூர்வமாக நிரூபித்ததாக கூறிய அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 வருட சிறை தண்டனையை விதித்தது. இந்நிலையில் மாலத்தீவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிப்பதாக உள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக கூறியுள்ள இந்தியா, தொடர்ந்து அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருகிறது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன், நசீர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இந்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் வரம்பிற்குள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.