Breaking
Sat. Jan 18th, 2025

மிஹின்லங்கா விமானசேவை  கொழும்பு தொடக்கம் கல்கத்தா வரையான தனது புதிய சேவையை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இப்புதிய சேவையினூடாக A319 அல்லது A321விமானம் வாராத்துக்கு மூன்று தடவைகள் பயணிக்கவுள்ளது.ஜூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து மேலும் பல விமானசேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய கொழும்பு- மதுரை மற்றும் கொழும்பு- டாக்கா விமானசேவை வாரத்துக்கு 6-7 தடவைகளாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.கொழும்ப- லாகூர் விமானசேவை ஜூன் 18 முதல் வாராந்துக்கு 3-5 தடவையும் கொழும்பு- சார்ஜா சேவை ஜூன் 19ஆம் திகதி முதல் வாரத்துக்கு 4-5 தடவைகளுமாக அதிகரிக்கப்படவுள்ளன.

Related Post