Breaking
Sat. Jun 21st, 2025

தேசிய பிரச்­சி­னை­களை தாண்டி ஒன்­று­பட்ட இலங்­கை­யினை கட்­டி­யெ­ழுப்பும் ஒரே நோக்­கத்­திற்­கா­கவே தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்து ஆட்சி நடத்­து­கின்றோம். சிங்­கள பௌத்த உரி­மை­களைப் போல் தமி­ழரின் உரி­மை­க­ளுக்கும் உணர்­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.
கிடைத்­தி­ருக்கும் வாய்ப்­பினை மீண்டும் சர்­வா­தி­கா­ரி­களின் கைகளில் கொடுத்து நல்­லாட்­சியின் பாதை­யினை மாற்­றி­ய­மைக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்­திற்கு கொண்டு வரும் முயற்­சியில் ஹெல உறு­மய அங்கம் வகிக்­குமா என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;
கடந்த காலங்­களில் நாடு சர்­வா­தி­கா­ரத்தின் பக்கம் சென்று கொண்­டி­ருந்­தது. ஒரு குடும்­பத்­திற்கு எதி­ரான மாற்று கருத்­துக்­க­ளுக்கு இடம் இருக்­க­வில்லை. எனினும் யுத்­தத்­தினை வெற்றி கொள்­ளவும் நாட்டை சரி­யான பாதையில் கொண்டு செல்ல வேண்­டிய தேவை இருந்­தது. ஆனால், இன்று நாட்டில் குழப்­ப­க­ர­மா­ன­தொரு சூழ்­நிலை இல்லை. பயங்­க­ர­வா­தத்­திற்கு இடம்­இல்லை. பிரி­வி­னை­யினை எதிர்­பார்த்து செயற்­பட்­ட­வர்கள் பலர் இன்று நல்­லாட்­சி­யினை விரும்­பு­கின்­றனர்.
பிரி­வி­னை­வா­தி­களே ஒன்­று­பட்ட நாட்­டினை விரும்பும் நேரத்தில் பௌத்த சிங்­கள உரி­மை­களை மதிக்கும் நாம் பிரி­வி­னை­வா­தத்­தினை தோற்­று­விக்கும் வகையில் அல்­லது இறுக்­க­மான போக்­கினை கையாள்­வது அர்த்­த­மற்ற செயற்­பா­டாகும். எனவே தேசிய அர­சாங்­கத்­தினை பலப்­ப­டுத்­தி­ய­மையும் தேசிய அர­சாங்­கத்­தினை தொடர்ந்து கொண்டு செல்ல முயற்­சிப்­பதும் தேசிய நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே. எனவே, மூவின மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஆட்சி நடத்­து­வ­தையே பெரும்­பான்­மை­யின மக்கள் விரும்­பு­கின்­றனர்.
மேலும், இந்த நாட்டில் சிங்­கள பௌத்த உரி­மை­க­ளுக்கு எவ்­வித பங்­கமும் ஏற்­ப­டக்­கூ­டாது. சிங்­கள கொள்­கைகள் அழிக்­கப்­ப­டு­வதை ஒரு போதும் நாம் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. ஆனால், ஏனைய மதங்­க­ளி­னதும் இனத்­த­வ­ரி­னதும் உரி­மைகள் அழிக்­கப்­ப­டக்­கூ­டாது. தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சுதந்­தி­ர­மாக வாழ வேண்டும்.
வடக்­கிலும் கிழக்­கிலும் தெற்கிலும் மக்கள் சுதந்திரமாக வாழும் ஆட்சி அமைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் இனவாதிகளின் கைகளில் ஆட்சியினை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கமாட்டோம். அதற்கான சந்தர்ப்பம் இனி ஒருபோதும் வராது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post