Breaking
Wed. Jun 18th, 2025

மன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெளி பாடசாலையின் அதிபர் ஹபீப் முஹ்பு உவைஸ் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட் நேற்றுமாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை அதிபர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அமைச்சர் எங்கள் பாடசாலைக்கு அதிகமான உதவிகளை செய்து உள்ளார் என்றும் இன்னும் எங்கள் பாடசாலை பல தேவைகளை உடைய பாடசாலையாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து றிஷாட் பதியுதின் தெரிவிக்கையில் பண்டாரவெளி பாடசாலைக்கு அவசர தேவையாக இருக்கின்ற ஆசிரியர் விடுதியினையும்,மாணவர்களின் அறிவு திறனை அதிகரிக்க ஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றையும் வெகுவிரைவில் அமைத்து தருவதாக தெரிவித்தார்.

இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும்,பரிசளிப்புகளும் வழங்கி வைத்து நிகழ்வு நிறைவடைந்தது.

Related Post