முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் கட்சியின் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.எம்.பைரூஸை ஆதரித்து அண்மையில் வேப்பங்குளத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இளைஞர்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட வேட்பாளர்  பைரூஸ், வேப்பங்குள பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஊர் முக்கியஸ்தர்கள், இந்த மண்ணின் அபிவிருத்திக்கு உதவிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எங்களை நிம்மதியாக வாழ அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளார். எனவே, எமது கிராம மக்கள் இம்முறை ஒருமித்து, முன்னாள் முசலிப் பிரதேச சபையின் உப தலைவராக இருந்த பைரூஸ் அவர்களின் வெற்றிக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.