Breaking
Sat. Jan 18th, 2025

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம்.

இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை  862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன்  488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Post