முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தராக அவரது மகனான யோசித்த ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற் படை லெப்டினான யோசித்த ராஜபக்ஷ, தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைக்குமாறு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தற்போது கடற் படையில் மூன்று மாத விடுமுறை பெற்று வெளிநாடு சென்றுள்ள அவர், கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.
யோசித்த ராஜபக்ஷ எவ்வாறு கடற் படையில் இணைந்து கொண்டார் என்பது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த முறைப்பாடு தொடர்பாக கடற் படையினரால் ஏற்கெனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.