Breaking
Fri. Mar 21st, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சரிடம் குறித்த கிராம மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

புல வருடங்களாக தாம் இருளில் இருப்பதாகவும், இதுபற்றி பல அரசியல் பிரமுகர்களிடம் கூறியும் தமக்கு மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் கிராம மக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், கறைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூன்று கிராமங்களுக்கு இன்று (புதன்கிழமை) மின்சாரத்தை வழங்கியுள்ளோம். விரைவில் முள்ளியவளை நாவற்காடு கிராமத்திற்கும் மின்சார வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையை எடுப்பதாக மக்களிடம் வாக்குறுதியளித்தார்.

Related Post