Breaking
Fri. Jun 20th, 2025

அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர தினத்தினை முஸ்லீம்கள் கொண்டாடும் ;முகமாக சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க – கடந்த 2 வருடத்திற்குள் அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் முஸ்லீம்களது பள்ளிக்குள் உடைத்துக் கொண்டு பாய்ந்தார்கள்.

பல்வேறு அவர்களது கலை கலாச்சார அம்சங்களில் உட்புகுந்து இம்சைப்படுத்தினார்கள்.

அந்த விடயங்களினை கவனிப்பதற்காகவே இந்த சூறா சபை கூட உருவாகியது என நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் தற்போதைய மைத்திரியின் ஆட்சியை மாற்றுவதற்கு 100 க்கு 100 வீதம் உதவினார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனி அந்த இருண்ட ஆட்சி முடிந்துவிட்டது. இந்த நாட்டில் முஸ்லீம்கள் நிம்மதியாகவும் தமது மதக்கடமைகளையும் சுதந்திராகமாகவும் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க முடியும்.

அவ்வாறு ஏதும் நடைபெறின் இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கும். இந்த நாட்டின் வாழும் 4 சமுகங்களும் ஜக்கியமாகவும் சமாதானமாகவும் இங்கு வாழமுடியும்.

இந்த நாட்டில் முஸ்லீம்கள் 15ஆம் நூற்றாண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர் என வரலாறு சான்று பகர்கின்றது எனக் குறிப்பிட்டார்.

Related Post