ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தொனிப்பொருளிலான உயர் வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ளது.
கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூட்டத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கு மத்திய மாகாண சபை முதலமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நூறு மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரசீத் எம். றியாழ் தெரிவித்தார்.
இத்தினத்தன்று மாலை நடைபெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.