Breaking
Wed. Jun 18th, 2025

இஸ்லாமிய இறைதூதரான முஹம்மது நபியை அவமதித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சார்லி ஹெப்டோவின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் மதநம்பிக்கையை புண்படுத்தியுள்ளது என கூறிய Muslim Action Forum (MAF) சார்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனையடுத்து லண்டனில் உள்ள Downing Street பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அந்த பத்திரிக்கையை கண்டிக்கும் விதத்தில் ‘சார்லி ஹெப்டோ ஒரு மோசடி பத்திரிக்கை’, ‘சார்லி ஹொப்டோ பத்திரிக்கை நாகரீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Muslim Action Forum(MAF) அமைப்பை சேர்ந்த Shaykh Tauqir Ishaq என்பவர், பத்திரிகையின் வளர்ச்சிக்காக ஒரு மதத்தை இழிவுப்படுத்துவது சரியில்லை என்று தெரிவித்தார். மேலும் பத்திரிக்கை அலுவலகம் தாக்குதலில் 12 பேர் பலியானது மிகவும் கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், இஸ்லாமிய அமைப்புகளிடம் முறையான சட்டத்திட்டங்கள் இல்லாததையே இந்த தாக்குதல் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அமைப்பு நடத்திய கையெழுத்து போராட்டத்தில் சுமார் 10,000 இஸ்லாமியர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post