Breaking
Wed. Jun 18th, 2025

அலபாமாவை சேர்ந்த டிமோத்தி எலி தாம்சன் என்ற மூக்கில்லாத குழந்தையின் புகைப்படத்தை தவறுதலாக நீக்கியதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

தங்களது சமூக தரத்தையோ, விளம்பர கொள்கைகளையோ மீறியதாக அப்புகைப்படம் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், அப்புகைப்படத்தை முதலில் ஆய்வு செய்தவர் தவறுதலாக ஆட்சேபித்ததால் அது அகற்றப்பட்டது. எனினும் புகைப்படத்தை வெளியிட்டவர் தரப்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டதால் உடனடியாக தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் அப்புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது மகனின் புகைப்படம் நீக்கப்பட்டதை தொடர்ந்து பேஸ்புக்கில் தனது கருத்தை பதிவு செய்த தாய் பிரன்டி மெக்ளார்த்தி, பேஸ்புக்கில் நாள் முழுவதும் காணும் நிலையில், நான் ஏன் எனது மகனின் புகைப்படத்தை போஸ்ட் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியதுடன், நான் எனது குழந்தையின் புகைப்படத்தை போஸ்ட் செய்வதை யாரும் தடுக்கமுடியாது என குமுறித்தள்ளினார்.

கடந்த மார்ச் 4 ஆம் தேதி குறை பிரசவத்தில் டிமோத்தி எலி தாம்சன் என்ற அக்குழந்தை மூக்கில்லாமல் பிறந்தான். தனது அதிசய குழந்தை குறித்து உலகிற்கு தெரியப்படுத்த விரும்பிய தாய் பிரன்டி, செல்லக்குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தார். ஏறத்தாழ 6 மணி நேரத்தில் 30000 ஷேர்களை குவித்து இண்டர்நெட் உலகையே அசரவைத்த தாம்சனின் புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளதாக கூறி, அந்த புகைப்படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Post