Breaking
Fri. Jun 20th, 2025

தொழில்மயமான நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐம்பது சதவீதத்தால் அதிகரித்து எட்டு லட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.சிரியாவிலும் இராக்கிலும் நடந்துரும் மோதலே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என அகதிகள் நலனுக்கான ஐநா அமைப்பு கூறுகிறது.

துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பல லட்சம் பேர் ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.மேற்குலக நாடுகள் கூடுதலான அகதிகளுக்கு அடைக்கலம் தர வேண்டும் என யு என் ஹெச் சி ஆர் வலியுறுத்தியுள்ளது.

சிரியாவினர், இராக்கிக்களுக்கு பிற்பாடு வளந்த நாடுகளில் அதிக அளவில் தஞ்சம் கோரும் மக்கள் என்றால் அது ஆப்கானியர்கள்தான்.கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து எழுபத்து மூவாயிரம் விண்ணப்பங்களைப் பெற்ற ஜெர்மனிதான் உலகில் அதிக அளவில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்ற நாடாக வந்துள்ளது.

Related Post