Breaking
Sat. Jun 21st, 2025

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எனது மகள் காணாமல் போனாள்.. அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள்.

எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார்.

தொடர்ந்தும் அவர் விபரிக்கையில்,

அடுத்த நாள் மகளை சந்திக்க போவதற்கு ஆயத்தமாகியபோது அதே தொலைபேசி அழைப்பிலிருந்து அது உங்களுடைய மகள் இல்லை என்று கூறி விட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மீண்டும் முயற்சித்தபோது அந்த இலக்கம் இயங்கவில்லை.

பின்னர் தேர்தல் காலங்களில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். எனவே, எனது மகளை மீட்டுத் தாருங்கள் என அந்த தாய் கேட்டுக் கொண்டார். (k)

missing_girl_001 missing_girl_002

Related Post