இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலக முன்றலில் இந்த வரவேற்பு வைபவம் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நரேந்திர மோடியை வரவேற்றார்.
இந்திய பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இந்த உத்தியோகபூர்வ வைபவத்தின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.