Breaking
Fri. Jun 20th, 2025
பிரதமர் மோடி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான பாதுகாப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த  பாதுகாப்பு கடமையில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸாரும்  நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மோடியின் நிகழ்வு இடம்பெறும் இடங்கள் மற்றும்  அதனை அண்டிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும்  தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியோ அல்லது பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வரும்போது கூட இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
முதல் தடவையாக இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும் அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இரண்டாவது பிரதமர் என்ற பெருமையினையும் மோடி பெற்றுள்ளார்.
மோடியின் வருகையினை முன்னிட்டு முக்கிய இடங்களில் இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்று காலை அநுராதபுரத்திற்கு வரும் இந்திய பிரதமர் மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் தலைமன்னாருக்கு செல்லவுள்ளார். அங்கு தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினை ஆரம்பித்து வைப்பார்.
அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்திய விமான படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி மூலம் வரும் மோடி  யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இறங்கவுள்ளார். பின்னர் யாழ். பொதுநூலகத்தில் கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.
இளவாலைப்பகுதியில் இடம்பெறவுள்ள இந்தியன் வீடுகளைக் கையளிக்கும் நிகழ்விலும் மோடி கலந்து கொண்டு வீடுகளை  மக்களிடம் கையளிப்பார். அத்துடன்  வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் மோடி சந்திப்பார் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய 3 மணித்தியாலங்களே மோடி யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post