Breaking
Fri. Nov 14th, 2025

ஈராக்கில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில்  ஒன்றிணைந்த புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது.

ஈராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னி மற்றும் குர்திஷ் இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிப் பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈராக்கின் பாதுகாப்பு அமைச்சராக ஹைதர் அல் அபாதி செயற்படவுள்ளதோடு இப்ராஹிம் ஜபாரி வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்

பல அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு பிறகே ஈராக்கில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது.

ஈராக்கில் புதிய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டு வந்த ஸலேஹ் அல் முட்லக் மற்றும் ஹோஷ்யர் ஸெபாரி ஆகியோர் அதிகாரப் பகர்வுக்கு பின்னர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளமை ஈராக் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கான ஒரு மைல்கல்லாகும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிடுள்ளது.

Related Post