பாறுக் சிகான்
யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த அமைச்சர் றிஷாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை அங்குள்ள முஸ்லிம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதன்போது அங்குள்ள பரச்சேரி கிராமத்தில் தற்காலிகமாக குடியேறிய மக்களை சந்தித்தார்.
அவ்வேளை, அம்மக்கள் தங்கள் பிரச்சினைகளை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர்.
உடனடியாக அம்மக்களின் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.
அடுத்து கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பரச்சேரி கிராமத்தில் உள்ள மஸ்ஜிதுல் சாபி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.
அதே வேளை அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்
இதன் போது முசலி பிரதேச சபை தலைவர் ஏகியா பாய்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் முஹம்மட் அமீன்,யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.