ஊடகப் பிரிவு
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று இடம் பெறும் இந்த நுால் வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த போதும்,தவிர்க்க முடியாதத காரணம் காரணமாக வருகைத்தர முடியாமையினையிட்டு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடமாகாண முஸ்லிம்களின் வரலாறு இந்த நாட்டை பொறுத்தவரையில் பதிவு செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும்.பல நுாற்றாண்டு கால வரலாற்றைவுடைய வடமாகாண முஸ்லிம்களின் கடந்த கால அரசியல்,சமூக பொருளாதார வரலாறு என்பது நாட்டின் ஏனைய முஸ்லிம்களின் வரலாற்றினைப் போன்று இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு சூழ் நிலை இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களை பொறுத்த வரையில் இந்நாடு அன்னியர் ஆட்சிக்கு உட்படுத்தப்படுவதற்கு பல காலங்களுக்கு முன்னரேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற சில வரலாற்று குறிப்புக்களை தவிர எம்மிடம் எதுவிதமான ஆவனப்படுத்தல்களும்,இன்று வரை இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறைபாடாகவே காணப்பட்டுவருகின்றது.
ஒரு சமூகம் தன்னுடைய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாத வரை அதனுடைய தற்கால.மற்றும் எதிர்கால இருப்பு என்பது பரந்த அளவில் கேள்விக்குரியாக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு வரலாறுகளை உலகம் கண்டிருக்கின்றது.
1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற அந்த துன்பகரமான சம்பவத்தின் பின்னர் இன்று படிப்படியாக தம் மண்ணை நோக்கி மீள்குடியேற எத்தனித்து கொண்டிருக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு என்பது கட்டாயமாக ஆவணப்படுத்தப்பட்டு அதனை வெளியுலகிற்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு வரலாற்று கடமை இன்று எம்மிடம் இருக்கின்றது.
தமிழ்-முஸ்லிம் இன உறவு என்பது எதிர்காலத்தி்ல் காத்திரமான முறையில் கட்டியெழுப்பப்படுவதற்கு இவ்வாறான வரலாற்று ஆவணப்படுத்தல்கள் அதிக அளவில் தேவைப்படுகின்ற ஒரு முக்கிய நேரம் இது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கடந்த கால அரசியல்,சமூக,பொருளாதார,காலச்சார மற்றும் பன்பாட்டு விடயங்களை தாங்கிவருகின்ற இந்த நுாலானது நிச்சயமாக அதன் இலக்கை அடைந்து கொள்ளும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
அரசியல்,கல்வி,வியாபாரம் மற்றும் மத விடயங்கள் தொடர்பாக தேசிய ரீதியில் பல ஆளுமை மிக்க துறை சார் முஸ்லிம் நிபுணர்களை பெற்றுத் தந்த யாழ் மண்ணின் விருட்சங்களை அடையாளப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இதனை என்னால் நோக்க முடிகின்றது..அதே போல் இன்றைய இலங்கை முஸ்லிம்களின் வரலாறு சாவல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழலில்,தேவையுணர்ந்து இதனை வெளிக்ககொண்டுவருதில் எடுக்கப்பட்ட முயற்சி ஒரு வரலாற்று பதிவு என்பதை இங்கு கூறிக்கொள்வதில் மகிழ்சியடைவதுடன்,இந்த முயற்சியானது ஏனைய மாவட்ட முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமிக்கதொன்றாகும் என்ற நற்செய்தியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந் நுால் தேசம் கடந்து சர்வதேசம் வியக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்,இந்த முயற்சியினை மேற்கொண்ட ஏற்பாட்டு குழுவுக்கும் எனது தனிப்பட்ட நன்றியினை இந்த தருனத்தில் கூறிக் கொள்வது பொருத்தமாகும்.