யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிக்கப்பட்டது. இரத்மலானையில் உள்ள விமானப்படையின் நூதனசாலைக்கு அதனை அதன் உரிமையாளர் ரோய் விஜேவர்த்தன கையளித்தார்.
இந்த விமானத்தை வித்தியாஜோதி கலாநிதி ரோய் விஜேவர்தனவே தயாரித்தார்.
இந்தநிலையில் அதனை அவர் சிங்கள திரைப்பட இயக்குநர் சந்திரன் ரட்ணத்துக்கு வழங்கினார். பின்னர் அது யோசித்தவுக்கு வழங்கப்பட்டது.
இந்த விமானத்தை விமானப்படையின் நூதனசாலைக்கு வழங்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் மத்தியஸ்தம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.