முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகனும் அவரது பாதுகாப்பு பிரிவு உறுப்பினருமாகிய யோசித்த ராஜபக்ஷவிற்கு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே யோசித்த ராஜபக்ஷ குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரியில் நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையொன்றில் இருந்து இருவர் மாத்திரம் பயணம் செய்யும் சிறய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டது.
அதன்பின் அந்த விமானத்திற்கு திரைப்பட இயக்குநர் ஒருவர் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.