இது தொடர்பான அழைப்பை அவர் தமது முகநூலில் பிரசுரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றால்; தூக்கிட்டு கொல்வதாக தாம் சவால் விடுத்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய கண்டிக்கூட்டத்தில் 10ஆயிரம் பேர் பங்கேற்றமையால் தாம் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டும் என்றும் விமல் வீரவன்ச கூறி வருவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் ஒருபோதும் கண்டி கூட்டம் தொடர்பில் சவால் எதனையும் விடுக்கவில்லை என்று ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தாம் கூறியதாக வெளியிட்ட கருத்து தொடர்பில் உறுதிப்படுத்த விமல் வீரவன்சவுக்கு முடியுமாக இருந்தால் அவர் தம்முடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என்று ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார்.
இதேவேளை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கலகொடஅத்தே ஞானசார தேரர் போன்றோரே மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணம் என்றும் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
– See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmuzB.html#sthash.8FpjVhL2.dpuf