கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக மூதூர் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான அஷ்-ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனக்கடிதம் அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் பதவி,பட்டங்கள் ஒன்றும் எமக்கு சொந்தமானவை அல்ல. இவை அமானிதமாகும். இவற்றைக் கொண்டு எமது சமூகத்திற்கு என்னென்ன உதவிகள் புரிய முடியுமோ அவற்றை பூரணமாக நிறைவேற்றுவேன் என குறிப்பட்டார்.