Breaking
Wed. Jun 18th, 2025

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.

ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் இங்கே தான் இலங்கை தமிழ் பெண்களையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள்.

அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவென தடுத்துவைக்கப்படும் நபர்களை இந்த முகாமிற்கே அனுப்புகிறார்கள். குறித்த முகாமில் சுமார் 400 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமானோர் பெண்கள் ஆவர். இவர்களில் 6 பேர் கர்பினிப் பெண்கள் என்பது திடுக்கிடும் தகவல்.

இங்கே பலர் எண்ணில் அடங்காத அளவு தற்கொலை முயற்சிகளுக்கு முயன்றுள்ளார்கள். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க இங்கே காவலாளிகளாக பணிபுரிபவர்கள் பெண்கள் குளிக்கும்வேளை பார்த்து அவர்கள் அறைக்குச் சென்று அவர்கள் குளிப்பததை பார்கிறார்கள். ஆபிரிக்க பெண்களைப் பார்த்து அவர்கள் மிருகம்போன்றவர்கள் என்று தமக்கு தாமே பேசும் காட்சிகள் மற்றும் ஒலி நாடாக்களையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பெண்கள் குளிக்கும்போது பார்பது அலாதியான ஒருவிடையம் என்றும், அதனை இங்கே தான் இலவசமாகப் பார்கலாம் என்றும் ஒரு காவலாளி மற்றைய காவலாளியோடு உரையாடும் ஒலி நாடாக்களும் வெளியாகி பெரும் அதிர்சியை கிளப்பியுள்ளது. இலங்கையில் மட்டும் பாலியல் கொடுமை நடக்கவில்லை.

பிரித்தானியாவில் அவை நடக்கிறது என்பதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்கள் சனல் 4 தொலைக்காட்சிக் குழுவினர். இதனால் லண்டன் இமிகிரேஷன் அதிகாரிகள் பெரும் சிக்கலில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

Related Post