வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் இருப்பதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவு கொழும்பு தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
வவுனியா, கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் திகதி தொண்டையில் நீர் இறங்கவில்லை என்று தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். ஆனால் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அக்கிரா மத்தை சேர்ந்த மாதர்சங்கத்தினர், சிறுமியின் பாட்டி ஆகியோர் கூறினர்.
ஆனாலும் இது தொடர்பாக கனகராயன் குளம் பொலிஸாரோ, அதிகாரிகளோ எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை . சிறுமி சம்பந்தப்பட்ட சட்ட வைத்திய அறிக்கையின் பின்னரே நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியிடப் பட்ட சட்ட வைத்திய அறிக்கையில் சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான தடயங்கள் இருப்பதாக சிறுவர் நன்னடத்தை பிரிவின் கொழும்பு தலைமை காரியாலயத்தால் தெரி விக்கப்பட்டுள்ளது என்பதை வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் சாவுக்கான காரணம் இருதய மற்றும் மூளை தொடர் பான பாதிப்பு என குறித்த வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தெரிவித் துள்ளது.