வருடாந்த மாணவர் வெளியேற்று விழா!

-ஊடகப்பிரிவு-

கல்குடா சர்வதேச பாடசாலையின் வருடாந்த மாணவர் வெளியேற்று விழா நேற்று முன்தினம் (23) ஒட்டமாவடி, பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி கலந்துகொண்டு உரையாற்றினார்.

சர்வதேச பாடசாலையின் தலைவர் கலீல் ரஹ்மானின் ஏற்பாட்டில், பணிப்பாளர் றுவைத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் ரிஸ்வி, திருமதி.ஹைருன் நிஷா அமீர் அலி, சட்டத்தரணி ராசிக், அதிபர்களான இஸ்மாயில், சுபைர்தீன், சாதிக்கீன், சாபீர், முபாரக் செம்மண்ணோடை மற்றும் மாவடிச்சேனை பொது வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.