Breaking
Thu. Jun 19th, 2025

ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது சீனா. நிலவுக்குச் சென்று அங்கிருந்து திரும்புவம் விண்கலத்தை வடிவமைத்து வரும் சீனா, வரும் 2020-ம் ஆண்டுக்குள் தனது சொந்த ஆய்வகத்தை விண்வெளியில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக கூடுதல் எடை சுமந்து செல்லும் நவீன ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது.

லாங் மார்ச் என்ற பெயரில் தொடர் ஏவுகலங்களை உருவாக்கி வரும் சீனா, இந்த ஆண்டு இறுதியில் லாங் மார்ச் 6 ஏவுகலத்தை விண்வெளியில் ஏவத் தயாராக உள்ளது.

இதுதொடர்பாக சீன விண்வெளி செலுத்துகை தொழில்நுட்ப அகாடமி தலைவர் டான் யாங்குவா கூறும்போது, “லாங் மார்ச்-6 ஏவுகலம் இந்த ஆண்டு மத்தியில் ஏவப்படும்.

லாங் மார்ச் 7 மற்றும் எங்களின் அதிக திறனுள்ள லாங் மார்ச் -5 ஏவுகலங்கள் அடுத்த ஆண்டு தங்களது பயணத்தைத் தொடங்கும். ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை விட பின்தங்கியுள்ளோம்.

அதிக எடையைச் சுமக்கும் இன்ஜின், தயாரிப்பு தொழில்நுட்பம், மூலப்பொருள்கள் ஆகியவற்றில் அந்நாடுகளை எட்ட வேண்டியுள்ளது” என்றார்.

அதிவேகமாகச் செல்லும் லாங் மார்ச் -6 ஏவுகலம் ஒரு மெட்ரிக் டன் எடையுள்ள ஆய்வுக்கலத்தை விண்வெளியில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.

Related Post