முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டுக் கொள்வதாக கடுவல மாநகர மேயர் ஏ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் சசீ வீரவன்சவிற்கு ஆதரவு அளித்த விமல் வீரவன்ச மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று வெளியில் வந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45/E சரத்தின்டி போலி ஆவணம் தயாரிக்க ஒத்துழைப்பு வழங்குவது குற்றம் என்றும் அதனை செயற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவில் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச கடந்த காலத்தில் சட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை என்றும் அதுகுறித்து வாக்குமூலம் பெற பொலிஸாருக்கு மூன்றரை வருடகாலம் சென்றதாகவும் இதற்கு முன்னைய ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று புத்ததாஸ தெரிவித்தார்.