Breaking
Sun. Jun 15th, 2025

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனின் மனாமா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருபவர் பினாய் முத்கல். விடுமுறைக்காக கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றிருந்த இவர் தனது மனைவி அஸ்வினி மற்றும் ஒருவயது பெண் குழந்தையுடன் இன்று கொச்சியில் இருந்து பஹ்ரைன் செல்லும் விமானத்தில் ஏறினார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை ரிஷி பிரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் அவசரமாக அபுதாபிக்கு திருப்பப்பட்டது. அபுதாபி விமான நிலையத்தை அடைவதற்குள் குழந்தை ரிஷி பிரியா பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் உடல் அபுதாபியில் உள்ள கலிபா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அபுதாபியில் இருந்து மீண்டும் புறப்பட்ட அந்த விமானம் இன்று காலை 10.10 மணியளவில் மனாமா வந்து சேர்ந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Post