அஸ்ரப் ஏ சமத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னைய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2014ஆம் ஆண்டில் 3 மாதங்கள் அமைச்சில் இருந்து இதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒவ்வொரு கிழமையும் இரண்டு நாட்கள் கலந்தாலோசித்து ஓளடத (மருந்தாக்கள்) சட்டத்தை சகல வேலைகளையும் முடித்திருந்தார். நான் தற்போதைய சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் முடிவுரை மட்டுமே எழுத முடிந்தது.
தற்பொழுது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிந்தது. இதனை சமர்பிக்கும்போது ஒரே ஒரு வேறு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே எதிராக பேசினார். ஏனைய சகலரும் இச் சட்டமுலத்தை ஏற்றுக் கொண்டனர். என சுகாதார சேனாரத்தின தெரிவித்தார்.
மேற்கண்டவாறு இன்று(6) தகவல் திணைக்களத்தில் ஓளடத சட்டம் பற்றிய ஊடக தகவல் அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு இந்த சட்ட முலம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் இச் சட்ட மூலத்தின் உறுப்பினர்கள் தகவல் அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளரும் உரையாற்றினார்கள்.
இக் கருந்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –
காலம்சென்ற பேராதெனிய உப வேந்தராகவும் மருத்துவ பேரசிரியராகவும் உலக போற்றும் சேனக பிபில அவர்களினால் 1950, 1970, 2005 ஒளடத (மருந்தாக்கல்) சட்டம் அன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அச் சட்டம் 2005இல் இச் சட்டத்திற்குரிய கோவைகள் அமைச்சரவையில் மற்றும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்காமல் ஒழிக்கப்பட்பட்டிருந்தன. இதனால் ஒரு சிலரின் கைப்பைக்குள் 3-4 பில்லியன்கள் சென்று கொண்டிருந்தது.
இந்தச் சட்டத்தினையும் புகைத்தல் சட்டம் ஓளடத சட்த்தினையும் இந்த நாட்டின் ஒரு நிலையான சட்டத்தினை கொண்டுவருவதற்கு இங்கு உள்ள பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒவ்வொர கிழமையும் 2 நாட்கள் நாரேகேன் பிட்டியில் உள்ள இரத்த வங்கியில் மணித்தியாலயக் கணக்கில் இருந்து 3 மாதங்களுக்குள் இந்த சட்ட திட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை அவர் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரும் வரை சகல சட்ட திட்டங்கள், ஏற்படுத்தியிருந்தார். ஆனால் சிலரின் தனிப்பட்ட தேவைகளுக்காக அச்ட்டம் 2005 மற்றும் 2014லும் அப் பையில் காணமல் போனது அச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இங்கு உதாரணத்திற்கு பேராசிரியர் பிபிலவின் ஒளடத சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு டிஸ்பிரினை 2 சதத்திற்கு பெற்று அதனை 10 சதத்திற்கு விற்கப்படுகின்றது. இதனால் இந்த நாட்டின் 8 சதம் விளம்பரத்திற்கும் அந்த குழிசையை அழகுபடுத்தி கச்சான் தகடுக்குள் அடைப்பதென சொல்லி கொள்ளை இலாபம் மீட்டப்படுகின்றது. இவ்வாறனதொரு கொள்ளை இலாபத்தை பேரசிரியர் எதிர்த்தார். இந்த நாட்டில் தேவையான மருந்துவகைகள்
ஒவ்வொருவரும் தனக்கு விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது என சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று பாராளுமன்றத்தில்தெரிவித்தார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறினார். இலங்கையில் தேசிய ஒளடதக் கொள்கையொன்றைக் கொண்டுவருவதற்கு சேனக பிபிலே மற்றும் டொக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க ஆகியோர் கடுமையாகப் பாடுபட்டிருந்தனர்.
அவர்களின் கனவு நீண்ட வருடங்களின் பின்னர் நனவாக்கப்பட்டுள்ளது. புதிய ஒளடதக் கொள்கையின் மூலம் நாட்டின்மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யமுடியும்என எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் இலங்கையில் மருந்துப் பொருட்களையும்இ மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்கும்இ இலங்கையிலிருந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் ஊடாக
ஏற்றுமதி செய்வதற்கும் எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.
மருந்துகளின் தரத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்கான வசதிகள் தற்பொழுது இலங்கையில் இல்லை. இருந்தபோதும் ஒளடத சட்டமூலம்
நிறைவேற்றப்பட்டதும் படிப்படியாக
மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ
உபகரணங்களின் தரங்களை சோதிக்கக்கூடிய ஆய்வுகூடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஓளடத சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் கடும் முயற்சி எடுத்திருந்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு 13 பேர் நியமிக்கப்படுவர். இந்த அதிகாரசபை மருந்துப் பொருட்களின் இறக்குமதி விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த தீர்மானங்களை எடுக்கும். எவருக்கும் தாம் நினைத்தது போன்று மருந்துப் பொருட்களுக்கான விலைகளை இனிமேல் நிர்ணயயிக்க முடியாது.
அதிகாரசபை விலை நிர்ணயம் தொடர்பில் குழுவொன்றை அமைத்து எடுக்கும் முடிவுகளுக்கு அமையவே மருந்துப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும். மருந்துகள் பணம் ஈட்டுவதாக இருந்தாலும் மக்களுக்கு சேவை அளிக்கும் வகையில்
இருக்கவேண்டு மென்பதே அரசாங்கத்தின்
நிலைப்பாடு என்றும் டொக்டர் ராஜித சேனாரட்ன கூறினார்.