-கலீல் எஸ் முஹம்மத்-
FREE VISA என்பது கட்டாருக்கு ப்றி விசா பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தேடி செல்வோரின் இன்னல்களை அதன் உண்மை நிலைகளை சித்திரிக்கும் தத்ரூபமாக காட்டும் ஒரு குறும்படமாகும்.
FREE விசாவில் கட்டாருக்கு வேலை தேடி வருவோருக்கு முன் எச்சரிக்கையாகவும் படிப்பினையாகவும் இது இருக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கபடுகிரர்த்து.
இந்த குறுந்திரைப்படமானது தற்போது கட்டாரில் படமாக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்பது விசேட அம்சம்மாகும். கட்டாரிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள மருதமுனை மண்ணில் பிறந்த சம்சுல் அஸாம் ரஷீதின் முழுமையான எண்ணக்கருவில் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் உருப்பெற்றுள்ள இப்படம் கட்டாரிற்கு வேலை தேடி வருவோருக்கு மட்டுமல்லாது பொதுவாக வெளிநாட்டு வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்தபட்டுகொண்டிருக் கிறது.
இப்படத்தின் ஒவ்வொரு சிறிய காட்சியும் கட்டங்களும் கிளைமாக்ஸ் நிலைக்கு சித்திரிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு வாழ்வின் உண்மை நிலை புலப்படும் வகையில் தயாரகி வருகிறது.
ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று அனுபவிக்கும் வலிகள் வேதனைகள் வெளிநாட்டுக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துவைத்திருக்கும் அனுபவ பாடம் என்கிற நிலை மட்டுமல்லாது தனது பெற்றோரின் மனைவியின் கணவனின் மகளின் மகனின் சகோதரனின் சகோதரியின் காதலியின் நண்பனின் இழப்பு எங்கனம் ஒருவரை பாதிக்கிறது என்பதை யதார்தபூர்வமாகியிருபது இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும்.
வாழ்கையில் தன்னம்பிக்கை என்பதற்கு இந்த படம் மூலம் முழுமையான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் இந்த படத்துக்கு FREE VISA என்ற பெயரின் அர்த்தம் வாழ்க்கை பாடத்துக்கு எங்கனம் பொருத்தமானது என்பதை மெய்சிலிர்க்கவைக்கும் கண்ணீருடனான காட்சி Free Visa என்ற சொல்லுக்கு முழுமையான அர்த்தம் அனைவரது கவனத்தையும் முழுமையாக ஈர்க்கும் என நம்பலாம்.
FREE விசாவில சென்று வேலை தேடி அலைந்து அந்த வேலையை பெற்றதும் அவரில் ஏற்படும் மனநிலை மாற்றம் தத்ரூபாமாக்கப்படுள்ளது எனலாம்.
அத்துடன் மருதமுனை கல்முனை சாய்ந்தமருது பகுதி எங்கும் இதற்கான சுவரொட்டிகள் ஓட்டுவதற்காக சம்சுல் அஸாம் ரஷீதின் நண்பர்கள் குழாம் முன்வந்திருப்பது இந்த குறும்படத்தின் வெற்றிக்கு முதல் படியாகும்.
கீழ் இருக்கும் படம் சற்று முன் கட்டார் விமான நிலையத்தில் படமாக்கபட்ட சிறிய காட்சியே இது!