Breaking
Fri. Jun 20th, 2025

தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும் ‘லங்கா’ பத்திரிகையிடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடான கோரிக்கை கடிதங்களை நேற்று அனுப்பு வைத்தார்.

அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை கலங்கப்படுத்த முன்னால் பாதுகாப்புச் செயலாளரும் ‘லங்கா’ பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

பெப்ரவரி 12ம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ள செவ்வியில், அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசியலுக்கு வந்ததன் பின்னரே வீடு வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனை மறுத்து தனது சொத்துக்களை பிரகடனப்படுத்திய அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் கோத்தாபயவும் தனது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டு மென ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

கோத்தாபய அதனை நிறைவேற்ற தவறியமையினாலேயே தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியமைக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத் தரணியூடாக கோரிக்கை கடிதத்தினை அனுப்பியிருப் பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதேவேளை துறைமுகப் பணிக ளுக்காக அமைச்சர் ரவியினால் 200 வாகனங்கள் சேவையிலீடுபடுத்தப்பட போவதாக போலியான தகவல்களை ‘லங்கா’ பத்திரிகை வெளியிட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

Related Post