Breaking
Sat. Jun 21st, 2025

மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் மிக வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி, மனித உயிர்களை அதே வேகத்தில் பலி கொண்டு வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றும், இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் வெயில் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமானால் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுக்குள் வந்துவிடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

Related Post