வானில் இருந்து இறக்கியருளபட்ட வேதங்கள் மற்றும் இறைதுதர்களை விமர்ச்சிப்போரையும் இழிவு படுத்துவோரையும் கடுமையாக கண்டித்து தண்டிக்கும் விதத்திலான புதிய சட்டங்களை மனித உரிமை அமைப்புகள் உருவாக்கி செயல் படுத்துவதின் மூலம் மட்டுமே உலகில் மலிந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுக்க முடியும் என்று மனித உரிமைகளுக்கான ஜெனிவா மாநாட்டில் சவுதி அரேபியாவின் பிரதிநிதி பைஸல் தராத் வேண்டு கோள் வைத்தார்
மார்ச்சு 23 ஆம் தேதி அவர் பேசும் போது உலகில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களில் பெரும்பாண்மை மதம் மற்றும் இனம் சார்ந்த தாகவே இருக்கிறது
ஒவ்வொரு மனிதனும் பிற மதத்தையும் மத்தவரையும் மதித்து சகிப்பு தன்மையோடு நடக்க பழகி கொள்ளும் போது உலகில் அமைதி நிலவும் இதர்கான வழிவகைகளை கண்டறிந்து அதை செயல் படுத்துவதில் மனித உரிமை அமைப்புகள் ஆறுவம் காட்ட வேண்டும் என்று கூறிய பைஸல் தராத்
மேலும் கூறும் போது
கட்டு பாடற்ற கருத்து சுதந்திரத்தில் சவுதி அரேபியாவிர்கு நம்பிக்கை .இல்லை என்றும் கட்டு பாடற்ற கருத்து சுதந்திரமும் மனித உரிமை மீறல்களுக்கே வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர்கள் வாயில் வந்ததை எல்லாம் கூறுவதும் மக்களின் மனங்களில் புனிதர்களாக நின்றுவரும் தீர்கதரிசிகளை விமர்ச்சப்பதும் மக்கள் புனித மாக கருதும் வேதங்களோடு மோதுவதும் பல் வேறு இடங்களில் கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் வித்திடுகிறது எனவே இதை தடுப்பதர்கு உரிய முயர்ச்சிகளில் இறங்கி விட்டால் பெரும்பாலான மனிதை உரிமை மீறல்களை தவிர்த்து விடலாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.