Breaking
Sat. Jun 21st, 2025

– ஜவ்பர்கான் –

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் உள்ள ஒந்தாச்சிமடம் சந்தியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி வேன் பிரதேச மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த தங்க ஆபரண தொழில் செய்யும் இரு பிள்ளைகளிக் தந்தையான சின்னத்தம்பி கமலசேகரம் வயது (42) என்பவரே உயிரிழந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் ஊர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு செல்லும் போது கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த டொல்பின் ரக வேன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தின் சாரதி  வேனை விட்டு தப்பி ஓடி பொலிஸில் சரணடைந்துள்ளார். ஆத்திரமடைந்த மக்கள் குறித்த வேனை முற்றாக சேதமாக்கியுள்ளனர்.

சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Post