அஸ்ரப் ஏ சமத்
ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த அயுப்காண் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஹம்பந்தோட்டை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சாம் மஹ்ருபின் மகன் மஹ்ருபையும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வு இன்று நரரேஹேன்பிட்டியில் உள்ள ஊழியர் சோமலாப நிதிய அலுவலகத்தில் நடைபெற்றது.
தொழில் திணைக்களத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதியமே உப்புக் கூட்டுத்தாபனத்;தில் 50 வீத பங்குகளைக் முதலிட்டுள்ளது.
இந் நியமனங்கள் அமைச்சர் சஜித்தின் வேண்டுகோளுக்கிணங்கவே இந் நியமனங்கள் தொழில் திணைக்களம் வழங்கியது.