ஹிக்கடுவ ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.45 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் மனோஜ் மென்டிஸ் உயிரிழந்தார்.
அவருடன் இருந்த இருவர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் மோப்ப நாய் கொண்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ள நிலையில் சந்தேகநபர்கள் குறித்த எவ்வித தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை.