Breaking
Fri. Apr 19th, 2024

 

-ஊடகப்பிரிவு-  

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம்.ஹலீம் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சிபாரிசில், 38 வருடமாக 1C தரத்தில் இருந்த நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் 1AB  தரத்துக்கு உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப வகுப்புக்களுக்கான அனுமதி வழங்கப்படுள்ளதுடன், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயமாகவும் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. .

இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், நற்பிட்டிமுனை அல்/அக்ஸா மத்திய மகா வித்தியாலய தரம் உயர்வு அனுமதிக் கடிதம் கையளிக்கும் நிகழ்வும் நேற்று (21) கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப்,  நற்பிட்டிமுனை அல்/கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம்.ஹலீம் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு, சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவித்ததுடன், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய தரமுயர்வு அனுமதிக் கடிதத்தையும் கையளித்தனர்.

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய தரமுயர்வுக்கு முக்கிய பங்காற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், தரமுயர்வுக்கு காரணகர்த்தாக்களாக இருந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத், நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம். ஹலீம் ஆகியோரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்..

இந்நிகழ்வில் லாபீர் வித்தியாலய அதிபர் பஸீர் உட்பட கல்லூரி பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டதுடன், மாணவர்களின் காலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *