Breaking
Sat. Apr 20th, 2024
அமைச்சர் றிசாத் பதியுதீன் இனவாதமற்ற ஒரு சிறந்த தலைவராவார்.அவரினால் வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கனை இன்று சகல சமூகங்களும் அனுபவித்துவருகின்றனர்.எதையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது இயலாத் தன்மையினை மறைப்பதற்காக வேண்டி அமைச்சர் றிசாத் மீது இனவாத சாயத்தை பூசுகின்றனர் என்று மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களை குடியேற்றவிடாமல் தடுக்கும் செயலை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலம் அவர் அதில் குறிப்பிட்டுள்ளாவது-
வன்னியில் வாழ்ந்த முஸ்லிம்களை அன்று வெளியேற்றியவர்கள் இன்றும் அதே பாணியில் செயற்படுகின்றனர்.
தமிழ்-முஸ்லிம் உறவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை.இந்த உறவுகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவது அவர்களின் இலட்சியமாகும்.
ஒரு தமிழன் என்ற வகையில் நாம் மிகவும் கவலையடைகின்றேன்.முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இங்கு அவர்களுக்கு தேவையானதை பெற்றுக் கொடுப்பது தான் முறையாகும்.அரச அதிகாரிகள் அதனை பெற்றுக்கொடுக்கவருகின்ற போது நாங்கள் அதற்கு ஒத்தாசையாகத் தான் இருக்க வேண்டுமே தவிர அதனை தடுக்கும் சமூகமாக இருந்துவிடக் கூடாது,
கடந்த கால யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை,முஸ்லிம்களும் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.எமது மாவட்ட மக்கள் அது முஸ்லிம்களாக இருந்தால் என்ன தமிழ் மக்களாக இருந்தாலென்ன அவர்கள் எம்மை போன்ற உணர்வுகளும்,தேவைகளும் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டும்.அதனை செய்ய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடுக்கின்றனர்.
முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற விடாமல் தடுத்தால் எமது பிரதேசமான நட்டான்கண்டலில் முஸ்லிம்களை குடியேற்றுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.எமது மக்கள் இந்த முஸ்லிம் சகோதரர்களை வரவேற்பதற்கு தயாராக இருக்கின்றனர் என்றும் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *