Breaking
Sat. Apr 20th, 2024

எமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்ங்கள் தொடர்பிலும் சகல சமூகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடியே அதனை செய்கின்றோம்.நாம் இவ்வாறான வெளிப்படைத்தன்மையினை பேனுவது எம்மில் இனவாத கொள்கையின்மையே ஆனால் சில அரசியல் கட்சிகள் அவர்கள் சார்ந்த மக்களை மட்டும் அழைத்து கலந்துரையாடுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் வடக்கு மக்களின் புரந் தியாகங்கள் இருப்பதாகவும் கூறினார்.

மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் இங்கு பேசுகையில் –
மன்னார் மாவட்டத்தில் இன்று மக்களுடன் மிகவும் நெருக்கமான பணிகளை செய்யக் கூடியவர்கள் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள்.இவர்களுக்கு இன்று சமூகத்தில் அங்கீகாரமுள்ளது.ஏனெினல் வறியப்பட்ட மக்களது வாழ்வாதாரத்துக்கு தேவையான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை நேரடியாக அந்த மக்கள் அனுபவிக்கச் செய்யும் நெருக்கத்துக்குரியவர்கள்.

இந்த சமூர்தி அதிகாரிகளின் நியமனம் இம்மாவட்டத்துக்கு கொண்டுவருகின்ற போது பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.ஒரு சமூகத்திற்கு மட்டும் இந்த நியமனத்தை வழங்குவதாக பிரசாரங்களை செய்தனர்.இதிலும் இனவாதம் பேசினர்.ஆனால் எம்மை பொறுத்த வரையில் அவ்வாறு நாம் செய்யவில்லை என்பதை இந்த சமூர்த்தி அதிகாரிகள் நன்கறிவர்.நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு தெரியும் நாம் மிகவும் நேர்மையுடன் இதனை செய்துள்ளோம் என ஆனால இந்த நியமனங்களை வேறு நபர்களிடம் வழங்கியிருந்தால் தெரிந்திருக்கும் அவர்களது பங்கீடு என்று என கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

அரசியல் வேறு அரச நிர்வாகமம் வேறு மக்களுக்கு பணியாற்றவே அரச அதிகாரிகள் அவர்களது பணி எந்த சமூகமாக இருந்தாலும் தேவையினை நாடிவரும் மனிதர்களுக்கு சேவையினை பாகுபாடுகளின்றி வழங்குவது இன்றியமையாதது.சமூர்த்தி அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் சிற்நத முறையில் பணியாற்றுகின்றனர்.

சமூகத்தில் வறிய மக்கள் என்பவர்கள் ஒதுக்கப்பட்டவர்காளக பாரக்கின்றனர்.ஆனால் அப்படிப்பட்ட மக்களிடத்தில் நாம் அன்பாக இருக்க வேண்டும்.அவர்களுக்கு என்ன வேண்டும் என்று இரக்கத்துடன் கேட்டு பணியாற்ற வேண்டும்.

இந்த மாவட்டத்தில் காணப்படும் சமூர்த்தி தொடர்பான குறைபாடுகள் தொடர்பில் சமூர்த்தி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.வெகு விரைவில் அவர்கள் தமது அமைச்சின் அதிகாரிகள் சகிதம் இந்த மாவட்டத்துக்கு வருகைத்தந்து மக்களின் பரச்சினைகளை தீர்த்து வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எனவே அதிகாரிகளாகிய நீங்கள் தாம் பணியாற்றும் கிராம அதிகாரி பிரிவில் சமூர்த்தி குடும்பங்களின் தேவைப்பாடுகள் குறித்த முழுமையான விபரங்களை திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

ri9 ri6.jpg2_6.jpg3_6

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *