Breaking
Sat. Dec 6th, 2025

ற்றுலா அல்லது கல்வி வீஸாவில் டுபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்பும் மோசடி வியாபாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவர்களை அந்த நாடுகளில் தவிக்க விட்டுவிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது.

இத்தகைய குழுக்கள் குறித்து பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இவ்வாறான பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பணியக விசேட விசாரணை பிரிவு தகவல் திரட்டியிருந்தது.

இவ்வாறு சட்டவிரோதமாக சுற்றுலா மற்றும் கல்வி வீஸாவில் சென்று தொழில் செய்து நட்டாற்றில் விடப்படுபவர்கள் தொடர்பில் பணியகம் எதுவித பொறுப்பும் ஏற்காது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஏமாற்று நபர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் அத்தகையோர் குறித்து பணியகத்துக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

(TK)

Related Post