Breaking
Thu. Apr 25th, 2024

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது. இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணம் ஆகும்” என அவர் தெரிவித்தார்.

“கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும், எதிர்கால சூழ்நிலைக்கும் ஏற்ற ஒருவராக, நான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கருதுகின்றேன். ஆகவே,  நான் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை முக்கியஸ்தரான ஜவாத் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியதன் பின்னர் கல்முனை அரசியலில் பாரியதொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலர் ஜவாத்துடன் இணைந்து, கல்முனை மாநகர சபைத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் கல்முனையிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *