Breaking
Mon. Dec 15th, 2025

இலங்கையில் தமிழர்களின் நலனை பேணிக்காப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தியதாக இரா.சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் வெள்ளிக்கிழமை (22) புதுடில்லியில் தெரிவித்துள்ளனர்.

புதுடில்லி வந்துள்ள கூட்டமைப்பின் குழுவினர் (22) காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்கள்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை முறையாக பெற்றுத் தருவதற்கு உதவிபுரிய கோரப்பட்டதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Related Post