தெற்காசிய நாடுகளில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை கண்டறியப்பட்டுள்ளது.
96 நாடுகளின் வாழ்க்கைத் தரச் சுட்டி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின் பின்னரான தரப்படுத்தல்படி இலங்கை 43ஆவது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நாடாக நோர்வே தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் முதியோர் வாழக்கூடிய சூழல் இல்லாத நாடாக ஆப்கானிஸ்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெல்ப்ஏஜ் சர்வதேச குளோபல் AgeWatch குறியீட்டு ஆய்வானது சமூகம், பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டாகும் போது உலக சனத்தொகையில் 21 சதவீதமானவர்கள் 60 வயதை கடந்த முதியவர்களாக இருப்பர் என ஹெல்ப்ஏஜ் சர்வதேச குளோபல் AgeWatch குறியீட்டு ஆய்வு குறிப்பிடுகிறது.
முதியோர் வாழக்கூடிய உகந்த நாடுகள் பட்டியலில் நோர்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் உள்ளன.
இதேவேளை, 2030ஆம் ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை உலக சனத்தொகையில் 1.4 பில்லியனாகக் காணப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

