Breaking
Fri. Apr 19th, 2024

77 வயது போப் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்று இருந்தார். தனது பயணம் முடிந்து வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.

விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன். அதற்காக பெருமைப்படவில்லை.

ஏனெனில் நான் இன்னும் சில காலம் மட்டுமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன். அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார். அதற்குள் ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது.

போப் ஆண்டவரான போது இயற்கையாகவே எனக்கு பாப்புலாரிட்டி கிடைத்தது. தொடக்கத்தில் அது எனக்கு சிறிய அளவில் ஒருவித பீதியை ஏற்படுத்தியது.

போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவது சாத்தியமே. ஏனெனில் எனக்கு முன்பு கடந்த ஆண்டு பெனடிக்ட் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து நீண்ட நாள் பணியாற்ற முடியாது என கருதியதால் பணியில் இருந்து விலகினார். 60 அண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க பிஷப்புகள் ஓய்வு பெறுவது என்பது நடைமுறையில் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. தற்போது அது சாதாரணமாகி விட்டது.

அதற்கான கதவை 16–ம் பெனடிக்ட் திறந்து விட்டார் என்றார். மேலும், அவர் கூறும்போது, ‘‘நரம்பு கோளாறினால் மிகவும் அவதிப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை தேவை. தற்போது அர்ஜென்டினாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டீம் தனது நரம்புகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றும் தமாசாக தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *