Breaking
Tue. Apr 16th, 2024
பஷன் பங் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலீஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

நேற்று இரவு பிரஸ்தாப களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும்,ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை பார்வையிட்டதுன்,உரிமையாளருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அதே வேளை தாக்குதல் இடம் பெற்ற இடத்தில் இருந்தவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலில் தொடர்பை ஏற்படுத்தியதுடன்.இவ்வளவு காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலையேற்படுத்தி வந்த அமைப்பு இன்று நேரடியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.இது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் என்பதை விளக்கப்படுத்தியுள்ளதுடன்,இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளை பாதுகாப்பு செயலாளருடனும் இந்த விடயம் குறித்து தொலைபேசியில் உரைாயடியுள்ளதுடன்,சட்டத்தை நடை முறைப்படுத்த பாதுகாப்பு தரப்பு இருக்கின்ற பொது இவ்வாறான செயல்கள் இடம் பெறுவதை நிறுத்தவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொலீஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு,இந்த செயல்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையேற்படுத்தியுள்ளது.இவ்வாறான செயல்கரைள எவர் செய்தாலும் அவர்கள் தாரத்திரம் பாராமால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் எற்பட்ட போதும் நாம் பல முறை இது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது பொலீஸாரின் கடமை என்றும் அமைச்சர் றிசாத் பதீயுதின் பொலீஸ் மா அதிபருக்கு எடுததரைத்துள்ளார்.
இதே வேளை இனிமேலும் இவ்வாறான செயல்கள் இடம் பெறாமல் இருப்பதை பொலீஸார் உறுததிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர்,இந்த சம்பவத்துடன் தொடர்பபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு போதுமான வீடியோ ஒளிப்பதிவுகள் உரியவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *