Breaking
Sat. Apr 20th, 2024

நிந்தவூரில் சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கான 500 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களது சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 08.07.2018 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் அரசியடி வட்டாரத்தில் இடம் பெற்றது.

டந்த தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்த இவ்நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.ரீ ஹசன் அலி, பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ். எம். இஸ்மாயில், அப்துல்லாஹ் மஃரூப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

500 மாதிரி வீட்டுத் திட்டத்திற்கமைவாக எதிர்வரும் காலங்களிலும் குறித்த சுயாதீனக் குழுவின் பரிந்துரைக்கமைய தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கான வீடுகளை வட்டாரங்கள் வாரியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கமைய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவ்களின் தலைமையில் இடம் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

முர்சித் முஹம்மட்-

Related Post