Breaking
Fri. Apr 19th, 2024
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்த பொது நூலகம், நேற்றைய தினம் (02) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
 
இதன்போது, இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக தமிழ் – முஸ்லிம் சமூகம் வாழும் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தின், சமூக மற்றும் கல்வி மறுமலர்ச்சிக்கு மாணவர்கள் மற்றும் இளம் சமூகத்தினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்து, தேடலை வேரூன்றச் செய்வதன் மூலமாகவே சாத்தியமாக்க முடியும் என தவிசாளர் தாஹிர் நம்பிக்கை தெரிவித்ததோடு, அதற்காக முனைப்புடன் செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம்.கமல் நெத்மினி, கெளரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல்.சுலைமா லெப்பை மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Related Post