Breaking
Wed. Apr 24th, 2024
நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கெதிரான உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
2019 ஆம் ஆண்டில் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காலி, நுவரெலியா மாவட்டங்களுக்கான புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான அறிவித்தல், காலி மாவட்டத்தில் முழுமையான செயலகங்களாகவும், நுவரெலியாவில் உப செயலகங்களாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது, இன ரீதியான பாரபட்சம் என்பதனை கண்டித்தும், ஒரே வர்த்தமானி அறிவிப்பு மாவட்டங்களுக்கிடையே இரு வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுவதை கண்டித்தும், மலையக அரசியல் அரங்கத்தினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜின் தலைமையில் இடம்பெரும் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் தனது ஆதரவை வெளிப்படுத்தி. மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி இன்று (02) கையெழுத்திட்டார்.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
 
“எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும், கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக எல்லை பிரிப்பு செயற்பாட்டை ஒத்ததாகவே இந்நிகழ்வும் காணப்படுகிறது.
 
இந்நாட்டில் பெரும்பான்மை சமூகம் நிர்வாக ரீதியாக எமக்கு இழைத்துக்கொண்டிருக்கும் அநீதிக்கெதிராகப் போராடிக்கொண்டிருக்கும் நாம், இன்னொரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளை, சிறுபான்மை இனத்தின் நியாயமான அபிலாசைகளை மதித்து நடக்க வேண்டியது கட்டாயம் என்பதனையும், இவ்விடத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.
 
 

Related Post