Breaking
Wed. Apr 24th, 2024

நினை­வாற்­றலும் கற்­றுக்­கொள்ளும் திற­மையும் கொண்ட ரோபோ­வொன்றை செய­லி­ழக்கச் செய்­வது குறித்து ரஷ்ய விஞ்­ஞா­னிகள் சிந்­திக்­கின்­றனராம்.

இந்த ரோபோ ஆய்வு கூடத்­தி­லி­ருந்து இரு தட­வைகள் தப்பிச் சென்­றமையே இதற்­கா­ன ­கா­ரணம்.

த புரோ­மோபோட் ஐ.ஆர்.77 (The Promobot IR77) என பெய­ரி­டப்­பட்ட இந்த ரோபோ அதிக செயற்கை மதி­நுட்பம் (ஆர்ட்­டி­பிஷல் இன்­ட­லிஜென்ட்) கொண்­டது.

தனது அனு­பவம் மற்றும் சுற்­றாடல் நிலை­மை­க­ளி­லி­ருந்து கற்­றுக்­கொள்ளும் திற­மை­யையும் அதிக நினை­வாற்­ற­லையும் கொண்ட ரோபோ இது.

இந்த ரோபோ விஞ்­ஞா­னிகள் எதிர்­பார்த்­த­தை­விட அதிக புத்­தி­சா­லித்­த­ன­மாக அமைந்­து­ விட்­ட­து­ போலும்.

அண்­மையில் ஆய்வு கூட­மொன்­றி­லி­ருந்து இந்த ரோபோ தப்பிச் சென்­றது. அதன்பின் அந்த ரோபோவை தேடிக்­கண்­டு­பி­டித்த ரோபோ தயா­ரிப்­பா­ளர்கள், அதன் கணினி மென்­பொ­ருளில் மாற்­றங்­களைச் செய்­தனர்.

ஆனால், அண்­மையில் இரண்­டா­வது தட­வை­யா­கவும் இந்த புரோ­மோபோட் ஐ.ஆர்.77 ரோபோ தப்பிச் சென்­றமை இதன் தயா­ரிப்­பா­ளர்­களை திடுக்­கிடச் செய்­துள்­ளது.

ரஷ்­யாவின் பேர்ம் கிராய் பிராந்­தி­யத்­தி­லுள்ள பேர்ம் நகர வீதி­களில் சென்று கொண்­டி­ருந்த ரோபோ அதன் பெற்­றரி வலு தீர்ந்த பின்­னரே ஓய்ந்­தது.

சுமார் 45 நிமிட நேரத்தின் பின்­னரே இந்த ரோபோ காணாமல் போன விடயம் அதன் கட்­டுப்­பாட்­டா­ளர்­க­ளுக்குத் தெரிய வந்­ததாம்.

இதனால், இந்த ரோபோவை செய­லி­ழக்கச் செய்­வது தொடர்பில் விஞ்­ஞா­னிகள் ஆராய்ந்து வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஆனால், இந்த ரோபோவின் அபி­மா­னிகள் அதை செய­லி­ழக்கச் செய்­யக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

“இது உயி­ருள்ள ஒரு நபரை கொல்­வ­தற்கு சம­மா­னது எனக் கூறும்  புரோ­மோபோட் ரசி­கர்கள், இந்த ரோபோ சுதந்­தி­ரத்தை நாடு­கி­றது எனக் கூறு­கின்­றனர்.

எனினும், இந்த ரோபோ தொடரில் தயா­ரிக்­கப்­பட்ட ஏனைய ரோபோக்கள் தப்பிச் செல்ல முற்­ப­ட­வில்லை எனவும் அவை சிறப்­பாக இயங்­கு­வ­தா­கவும் விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.

புரோ­மோபோட் ரோபோவை தயா­ரித்த ஆய்­வு­கூ­டத்தின் இணை ஸ்தாப­க­ரான ஒலேக் கிவோ­கு­ரட்சேவ் என்­பவர் கூறு­கையில், “நாம் தற்போது 3 ஆம் தலைமுறை ரோபோக்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

எதிர்வரும் இலையுதிர் காலத்தில் இந்த ரோபோக்கள் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

2

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *